×

விமான ஆண் பணியாளரை முத்தமிட்டு ‘ரெட் ஒயின்’ கேட்டு அடம்பிடித்த பயணி கைது: அமெரிக்க விமானத்தில் அட்டகாசம்

அலாஸ்கா: விமானத்தின் ஆண் பணியாளரை முத்தமிட்ட போதை பயணி ஒருவர், ரெட் ஒயின் கேட்டு அடம்பிடித்து தகராறு செய்ததால் அவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்காவின் மினசோட்டாவில் இருந்து அலாஸ்கா நோக்கிச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் டேவிட் ஆலன் பர்க் (61) என்ற பயணி, பிசினஸ் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். முதல் வகுப்பு பயணி என்பதால், விமானம் புறப்படுவதற்கு முன்பு மது அருந்த அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போது மதுபானம் வழங்கப்படவில்லை. மாறாக விமானம் புறப்பட்ட பிறகு, டேவிட் ஆலன் பர்க்கிற்கு ஒரு கிளாஸ் ரெட் ஒயின் வழங்கப்பட்டது. அவருக்கு சரக்கு வழங்கிய விமான ஆண் உதவியாளரின் கையை பிடித்து குலுக்கினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தின் கழிவறைக்குச் செல்ல முயன்றார். எதிரே வந்த ஆண் விமானப் பணியாளரை பார்த்து, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறினார். அதற்கு அந்த ஆண் பணியாளர், நன்றி என்று கூறிவிட்டு அவரை கடந்து சென்றார். எதிர்பாராதவிதமாக அந்த ஆண் பணியாளரை கட்டிப்பிடித்து அவரது கழுத்தில் முத்தமிட்டார்.

அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்பு காரணமாக லெவல்-2 எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, கழிவறைக்குச் சென்ற டேவிட் ஆலன் பர்க், வழியில் கேப்டனுக்கு ஒரு பணியாளர் உணவு கொண்டு சென்றார். அந்த தட்டையும் உடைத்தார். இதையெல்லாம் செய்த பிறகும், விமானப் பணியாளர்கள் பொறுத்துக் கொண்டனர். பின்னர் தனது இருக்கைக்கு சென்ற ஆலன் பர்க், தூங்குவதற்கு முன்பு இரண்டு கிளாஸ் ரெட் ஒயின் கேட்டார். ஆனால், விமானம் பறந்து கொண்டிருந்ததால் அவருக்கு ஒயின் தரவில்லை. இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவழியாக விமானம் அலாஸ்கா வந்தடைந்ததும், டேவிட் ஆலன் பர்க்கை விமான நிலைய அதிகாரிகளிடம் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலன் பர்க்கிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

The post விமான ஆண் பணியாளரை முத்தமிட்டு ‘ரெட் ஒயின்’ கேட்டு அடம்பிடித்த பயணி கைது: அமெரிக்க விமானத்தில் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Alaska ,
× RELATED நடுவானில் கதவு கழன்று விழுந்த...