×

தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் ஈடுபட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் மாநாடுகளைக் கூட்டி, அன்னைத் தமிழைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்; தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளையும், பரப்புரைகளையும் மேற்கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். எனவே, தமிழறிஞர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் ஆசிரியர்களே வாருங்கள்… ஒன்றாக கைக்கோர்ப்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்.

The post தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் ஈடுபட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,CHENNAI ,BAMA ,Ramadas ,Tamil Nadu ,
× RELATED வாரிசு அரசியலை ஒழிப்போம் என பேசும்...