×

ரம்ஜானை முன்னிட்டு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் எற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் காட்டேஜ், ேஹாட்டல், விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர். ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ரம்ஜானை முன்னிட்டு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Ramzan ,
× RELATED ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்