×

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்தது பஞ்சாப் போலீஸ்

அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங். இவர் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்ததாக இவர் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவரை போலீஸாரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான பால் சிங்கை அவரது சொந்த ஊரான மோகாவில் கைதானார். அமிர்தசரஸில் காவல்நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில் அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கத்தி, துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் விடுவித்தது. அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் 78 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்தது பஞ்சாப் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Punjab Police ,Amritbal Singh ,Kalystan ,Amrit ,Amritpal Singh ,
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்