×

கம்பம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நாசம்

 

கம்பம், ஏப். 23: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, , நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, அண்ணாபுரம் பகுதிகளில் தற்போது சுமார் 3000 ஏக்கருக்கு மேல் செவ்வாழை, நாழி பூவன், பச்சை வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி தினேஷ் என்பவர் கம்பம் அருகே அண்ணாபுரம் பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தென்னைக்கு ஊடுபயிராக சுமார் ஐந்தாயிரம் நாழி பூவன் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கம்பம், கூடலூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்த பலத்த காற்றில், விவசாயி தினேஷின் ஆயிரக்கணக்கான வாழைகள் ஒடிந்து சேதமானது. சேதமடைந்த வாழைகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்தில் தார்கள் வெட்டும் பருவத்தில் இருந்ததால் விவசாயிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இகுறித்து விவசாயி கொடுத்த தகவலைத்தொடர்ந்து நேற்று இந்நிலையில் நேற்று சேதம் அடைந்த வாழைகளை கம்பம் புதுப்பட்டி கிராம நிர்வாகி அதிகாரி சிவக்குமார், கம்பம் துணை தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் ஆகியோர்கள் பார்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு சென்றனர்

The post கம்பம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kampham ,Gampam Valley ,Karunakkamuthanpatti ,Surulipatti ,Narayanathevanpatti ,Dampatti ,Kampam ,Dinakaran ,
× RELATED கிறுகிறுக்க வைக்குது கோடை வெயில்...