×

சனிதோறும் படியுங்கள் சுக்காம்பாரில் சித்திரை கார் நடவு பணி துவக்கம்

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் விவசாயம் சார்ந்த பகுதியாக இப்பகுதியில் வசிப்பவர்கள் இரவு பகல் பாராது விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். தற்போது இந்த கிராமத்தை சுற்றி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சித்திரைக்கார்நடவு பணியினை துவக்கி உள்ளனர். விவசாயிகள் ஏர் கலப்பையில் மாடு பூட்டி உழவுட்பணி செய்து, பெண்கள் மூலம் நடவு செய்யப்பட்டு வந்தது. இப்போது இயந்திரம் மூலம் உழவு பணியும், நடவு பணியும் நடைபெறுகிறது. இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், ஏர் கலப்பையில் மாடு பூட்டி உழவு பணியில் ஈடுபட்டால் இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். தற்போது மாடுகள் இல்லை.

வேலையும் அதிகம். ஒரு ஏக்கருக்கு இயந்திரம் மூலம் உழவு, நடவு பணிவரை ஆகும் செலவு ரூ.5000 ஆகும். பழைய முறையில் நடவுக்கு ஒரு ஏக்கருக்கு 21 பேர் பெண் தொழிலாளர்கள் தேவைபடும். பெண்களை வைத்து நடவு செய்தாலும், துணைக்கு ஆண்கள் குறைந்தது 5 பேர் தேவைபடும். தற்போது ஆள்பற்றாகுறையும் உள்ளதால் இயந்திரம் மூலம் நடவு பணி செய்யும்போது 2 நபர்கள் மட்டுமே இருந்தால் போதும் என்றார். அதனால்தான் விவசாயிகள் இயந்திரத்தை பயன்படுத்தி நேரத்தையும், பணத்தையும் சேமிக்கின்றனர்.நட்டதிலிருந்து 10 நாட்கள் கழித்து உரம் 1 மூட்டையூரியா, 1 மூட்டை காம்ப்ளக்ஸ், நுண்ணூட்டம் ரூ.800 போடவேண்டும். நடவு பணியில் இருந்து 3 முறை பூச்சி தாக்காமல் இருக்க மருந்து இயந்திரம் மூலம் அடிக்க வேண்டும், பூச்சி தாக்குதல் இல்லாமல் நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 45 முதல் 50 மூட்டை வரை அறுவடை செய்யலாம் என்றார்.

The post சனிதோறும் படியுங்கள் சுக்காம்பாரில் சித்திரை கார் நடவு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chukkambar ,Thirukkatupalli ,sukambar ,Thirukkattupalli ,Chukambar ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு