×

கலெக்டர் பேட்டி வேப்பத்தூரில் குருபூஜை 3வது நாள் விழா

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் 106ம் ஆண்டு சிறுதொண்ட நாயனார் குருபூஜை விழா 3 நாட்கள் நடந்தது. இவ்வூரில் உள்ள சிவனடித் தொண்டு வேப்பத்தூர் வாசிகள் 105 ஆண்டுகளாக சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் சிறுதொண்ட நாயனார் குருபூஜை விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 3 நாட்கள் இவ்விழா நடந்தது. இதில் முதல் 2 நாட்கள் சீராளன் பல்லக்கு வேப்பத்தூர், பாகவதபுரம், ராமமூர்த்தி நகர், கல்யாணபுரம் ஆகிய 4 கிராமங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது.இதை தொடர்ந்து இரவு சுமார் 200 பக்தர்கள் காவிரியில் இருந்து அலகு காவடி, பால் காவடிகள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.இதைத் தொடர்ந்து 3வது நாளில் பிச்சாண்டவர் ஊர்வலம், மாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அமுது படைத்தல், இரவு சிறப்பு கேரள ஜெண்டை மேளம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆத்தீஸ்வரர் சுவாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

The post கலெக்டர் பேட்டி வேப்பத்தூரில் குருபூஜை 3வது நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Gurupuja ,Veppattur ,Thiruvidaimaruthur ,Siruthonda Nayanar Gurupuja festival ,Vepatthur ,Guru Puja ,Vepattur ,
× RELATED அரிமளம் அருகே காமாட்சி அம்மன்...