×

ஒட்ட பந்தயத்தில் மாணவர் முதலிடம்

 

தொண்டி,ஏப்.23: காரங்காடு கிராமத்தை சேர்ந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.தொண்டி அருகே காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விலிங்டன். இவர் மதுரையில் உள்ள தனியார் ஐடிஐயில் மாணவராக பயின்று வருகிறார். மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற ஒட்பப்பந்தயத்தில் வெற்றி பெற்றதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு த்துறை சார்பில் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்தார்.இதுகுறித்து விலிங்டன் கூறியது, சிறு வயது முதல் ஒடுவதில் கவனம் செலுத்தி வந்தேன். தினமும் பயிற்சி எடுத்ததால் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தேன் என்றார்.

The post ஒட்ட பந்தயத்தில் மாணவர் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Otta ,Thondi ,Karangadu ,Dinakaran ,
× RELATED ஊராட்சிகள் எல்லை அளவீடு