பேரையூர், ஏப். 23: டி.கல்லுப்பட்டி அருகே ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது.டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள நல்லரம் என்ற ஊரில் வீரபத்ர ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசியின் 1ம் பாதத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு அனைத்து ராசியினருக்கும் நன்மை வேண்டி யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி கும்பபூஜை, கலசபூஜை, கோமாதா பூஜைகள் நடைபெற்றது.
அனைத்து ராசியினருக்குமான பரிகாரங்களாக ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீர், இளநீர், குங்குமம், உள்ளிட்ட 11 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. பின் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நல்லரம், கொட்டாணிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post டி.கல்லுப்பட்டி அருகே ஆஞ்சநேயர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.
