×

உலக புவி தினத்தையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் குடும்ப ரங்கோலி போட்டி

நெல்லை: உலக புவி தினத்தை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் குடும்ப ரங்கோலி கோலம் வரையும் போட்டி நடந்தது. பூமியின் எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு என்ற தலைப்பில் குடும்ப சகிதமாக ரங்கோலி கோலம் வரையும் போட்டி நடந்தது. இதில் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களாக உள்ள பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோருடன் குழுவாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டிகளை அறிவியல் மைய அலுவலர் குமார் துவக்கிவைத்தார். கல்வி அலுவலர் மாரிலெனின், போட்டி விதிக்கான விதிமுறைகள் குறித்து பேசினார். போட்டியில் 7 குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் தங்களது பெற்றோருடன் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ- மாணவிகள், அறிவியல் மைய தரையில் பல வண்ணங்களை பயன்படுத்தி ரங்கோலி கோலங்கள் வரைந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். தொடர்ந்து நடந்த விழாவில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

The post உலக புவி தினத்தையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் குடும்ப ரங்கோலி போட்டி appeared first on Dinakaran.

Tags : Family Rangoli Competition ,Paddy Science Center ,World World World Day ,Paddy ,Family Rangoli ,Kolam ,District Science Centre ,Kokkrakulam ,World World Day ,World World World World Day ,Dinakaran ,
× RELATED நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தை...