×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வட சென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும், 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

The post வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vadachennai ,Thermal ,Power ,Station ,CHENNAI ,North Chennai Thermal Power Station ,Vadachennai thermal ,Dinakaran ,
× RELATED வடசென்னை 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு