×

திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை தொடக்கம்

சென்னை: திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழா பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மிக முக்கியமான திருவிழாவாகும். இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா நாளை தொடங்கி, மே மாதம் 6ம் தேதி வரை 13 நாட்கள் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. தினசரி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் (5 சுவாமிகள்) மாடவீதி உலாவும், மற்றும் இத்திருவிழாவில் முக்கிய உற்சவமான அதிகார நந்தி சேவை, திருத்தேர், மாடவீதி உலா வலம் வரும் நிகழ்ச்சி என முக்கிய உற்சவங்கள் நடைபெற உள்ளன.

* முக்கிய திருவிழா நாட்கள் விவரம்

28.04.2023 (வெள்ளி) – காலை 8.00 மணிக்கு – அதிகார நந்தி சேவை
30.04.2023 (ஞாயிறு) – இரவு 10.00 மணிக்கு – ரிஷப வாகன சேவை
02.05.2023 (செவ்வாய்) – காலை 6.30 மணிக்கு – இரத உற்சவம் (திருத்தேர்)
03.05.2023 (புதன்) – மாலை 4.00 மணிக்கு – 63 அறுபத்தி மூன்று நாயன்மார்கள் உற்சவம்
04.05.2023 (வியாழன்) – இரவு 9.00 மணிக்கு – பிஷாடனர் உற்சவம்
05.05.2023 (வெள்ளி) – இரவு 9.00 மணிக்கு – திருக்கல்யாண உற்சவம்

The post திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni ,Tiruvetheeswarar ,temple ,Chitra festival ,Chennai ,Chitrai ,Peruvizha ,Tiruvallikeni Thiruveteswarar Temple ,Chitrai Peruvizha ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...