×

ஆட்குறைப்பு சூழலிலும் சுந்தர் பிச்சைக்கு ரூ.1,855 கோடி சம்பளம்

நியூயார்க்: ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் ஓராண்டு சம்பளம் சுமார் ரூ.1,855 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஆல்பாபெட் இன்க்’ இந்த ஆண்டு ஜனவரியில் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. குறைந்து வரும் லாபம், அதிகரித்து வரும் செலவுகள் ஆகிய காரணங்களால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக தெரிவித்தது. இதற்கிடையில், 2022ம் ஆண்டில் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழருமான சுந்தர் பிச்சை பெற்ற மொத்த சம்பளத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

இது கூகுள் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும். அதாவது 2022ம் ஆண்டில் சுந்தர் பிச்சை மொத்தம் 226 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,855 கோடி) சம்பளம் பெற்றுள்ளார். இது குறித்த விவரங்களை அமெரிக்க பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் அளித்துள்ளது.சம்பள அடிப்படையில் பார்த்தால், சுந்தர் பிச்சையின் சம்பளம் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே அளவில்தான் உள்ளது. நிறுவனத்தின் பங்குவர்த்தகத்தின் அடிப்படையில், அவரது சம்பளம் பலமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஆட்குறைப்பு சூழலிலும் சுந்தர் பிச்சைக்கு ரூ.1,855 கோடி சம்பளம் appeared first on Dinakaran.

Tags : Sundar Pichai ,New York ,Alphabet ,CEO ,
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்