×

300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி: 16 பேர் படுகாயம்

போடி: போடிமெட்டு அருகே 300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உறவினர்களான 20 பேர், கேரள மாநிலம் மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட்டில் இன்று (ஏப்.23) நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வேனில் நேற்று மாலை புறப்பட்டனர். போடிமெட்டு மலைச்சாலையை கடந்து, கேரள மாநிலம் பூப்பாறை அருகே மலைச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோண்டிமலை – தலக்குளம் இடையே உள்ள இரைச்சல் பாலம் அருகே வளைவில் வேன் சென்றபோது, பாதை தெரியாமல் நேராக பாறையில் மோதி 300 அடி பள்ளத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து ஏலத் தோட்டத்திற்குள் விழுந்தது.

வேனில் இருந்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு கதறினர். பொதுமக்களும், போலீசாரும் வேனில் சிக்கியவர்களை போராடி மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் (59), வள்ளியம்மாள், விஸ்வா (8) மற்றும் சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 16 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post 300 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி: 16 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Van ,Bodi ,Bodimetu ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்