×

போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ பைனலில் ஸ்வியாடெக்

ஸ்டுட்கார்ட்: ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். அரையிறுதியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (28 வயது, 4வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) முதல் செட்டில் 3-0 என முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக ஜெபர் விலக நேரிட்டது. இதையடுத்து ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் களமிறங்கிய பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (24 வயது, 2வது ரேங்க்) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அனஸ்டேசியா போத்தபோவாவை (ரஷ்யா) வீழ்த்தினார். இப்போட்டி 58 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக் – சபலென்கா மோதுகின்றனர்.

The post போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ பைனலில் ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Tags : Sviatek ,Porsche Tennis Grand Prix Final ,Stuttgart ,Porsche Tennis Grand Prix ,Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…