×

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ஜெயச்சித்ரா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ஜெயச்சித்ரா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த ஜெயச்சித்ரா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்த்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ஜெயச்சித்ரா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayachitra ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Chatur ,
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...