×

தலாய் லாமா –ஜோ பிடனை ஒப்பிட்டு ‘மீம்ஸ்’ போட்ட கங்கனாவின் ஆபீஸ் முற்றுகை: காமெடி பதிவால் நடிகைக்கு வந்த சோதனை

மும்பை: தலாய் லாமா – ஜோ பிடனுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய மீம்ஸ் போட்ட நடிகை கங்கனாவின் மும்பை ஆபீசை, புத்த மதத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கடந்த சில தினங்களுக்கு குழந்தை ஒருவருக்கு முத்தமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்காக தலாய் லாமா மன்னிப்பு கோரினார். ஆனால் அவரது இந்த வீடியோவை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. அந்த மீம்ஸ்களில் குழந்தைக்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பிடனை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். இதுவும் மிகவும் வைரலானது.

இந்த மீம்ஸை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில், ‘ஹ்ம்ம், இருவருக்கும் ஒரேவிதமான நோய் உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார். கங்கனாவின் இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாகவும் மற்றொரு வீடியோவை கங்கனா பகிர்ந்துள்ளார்.

அதில், ‘பாலியில் உள்ள எனது அலுவலகத்திற்கு வெளியே புத்த சித்தாந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நான் பகிர்ந்த மீம்ஸ் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. ஜோ பிடனுக்கும் தலாய் லாமாவுக்கும் இடையிலான நட்பைப் பற்றிய நகைச்சுவை பதிவாகும். என்னுடைய உணர்வுகளை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். புத்தரின் போதனைகளை நம்புகிறேன். தலாய் லாமா மக்களுக்கு பல வகைகளில் சேவை செய்கிறார்.
அதற்காக அவருக்கு சல்யூட். என்னுடைய மனதில் யாரை பற்றியும் எவ்வித கெட்ட எண்ணமும் இல்லை. தயது செய்து இந்த வெயிலில் நிற்காமல், வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதிவைப் பார்க்கும்போது, அவர் நகைச்சுவையாக பதிவிட்ட மீம்ஸ் தர்ணா வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தலாய் லாமா – ஜோ பிடனை ஒப்பிட்டு ‘மீம்ஸ்’ போட்ட கங்கனாவின் ஆபீஸ் முற்றுகை: காமெடி பதிவால் நடிகைக்கு வந்த சோதனை appeared first on Dinakaran.

Tags : Kangana ,Dalai Lama ,Biden ,Mumbai ,Joe Biden ,Buddha ,
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...