×

ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; மும்பையுடன் பஞ்சாப் பலப்பரீட்சை: லக்னோவை வீழ்த்துமா குஜராத்?

லக்னோ: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாட உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3 வெற்றி, 2 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

லக்னோ அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நம்பிக்கையுடன் உள்ளது. மறுபக்கம் குஜராத் அணியை பொறுத்தவரை கடந்த சீசனை போல் அல்லாமல் இலக்கை டிஃபெண்ட் செய்வதில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளதால், குஜராத் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அந்த அணியில் சுப்மன்கில், சாய் சுதர்சன், சாஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதுபோல் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பி உள்ளது. ரோஹித் சர்மா, இஷான்கிஷன், திலக்வர்மா, கேமரூன் கிரீன் பேட்டிங்கில் அசத்துகின்றனர். பியூஸ்சாவ்லா, பெரன்டோர்ப் நன்றாக பந்து வீசுகின்றனர். உள்ளூர் மைதானத்தில் ஆடுவது மும்பைக்கு சாதகமாக கருதப்படுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தமட்டில் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் கேப்டன் ஷிகர்தவான் ஆடமுடியாத நிலை உள்ளது. சாம்கரன் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ரபாடோ, சிக்கந்தர்ராசா ஆகியோரில் ஒருவர் இன்று ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

The post ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; மும்பையுடன் பஞ்சாப் பலப்பரீட்சை: லக்னோவை வீழ்த்துமா குஜராத்? appeared first on Dinakaran.

Tags : IPL ,Lil ,Punjab Palapareth ,Mumbai ,Lucnow ,Gujarat ,Lucknow ,16th IPL cricket series ,Lille ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...