×

வெற்றியை அறிவிப்பதில் தாமதம்.! தேர்தல் அலுவலரை முற்றுகை

குன்றத்தூர்: கடந்த 9ம் தேதி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள், மாங்காடு அருகே முத்துக்குமரன் கல்லூரியில் நடந்தது. காலை 6 மணி முதல் வாக்கு எண்ணும் பணிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் வரத்தொடங்கினர். இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு காலை உணவு தாமதமாக 10.30 மணிக்கு வழங்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்காமல் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் உடனடியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கவில்லை. இதனால் காலையில் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்,  அதற்கான சான்றிதழ்கள் வாங்க இரவு வரை காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.  இதனால் வாக்கு எண்ணும் கல்லூரி வளாகத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பலர், தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களது வெற்றி உறுதியான பின்பும் ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏன் இவ்வளவு காலதாமதம் , வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கதாமதம் செய்தால், நாங்கள் எப்போது வீட்டுக்கு செல்வது என்று அதிமுகவினர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

The post வெற்றியை அறிவிப்பதில் தாமதம்.! தேர்தல் அலுவலரை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Delay ,of ,Officer ,Kunradthur ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின்...