×

சின்னாளபட்டியில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

நிலக்கோட்டை, ஏப். 22: சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் மழைநீர்- கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னாளபட்டி பிரிவிலிருந்து பஸ்நிலையம் செல்லும் பூஞ்சோலை பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் சாலையோரம் மழைநீர், கழிவுநீர் வடிகால்களுடன் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, பஸ் நிலையம் செல்ல வேண்டும். இப்பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கம்பிகள் தெரியும் வகையில் அபாயகரமாக உள்ளதால் அப்பகுதி தெருக்களில் குடியிருக்கும் மக்கள், பல தெருக்களை சுற்றி வரும் நிலைமை உள்ளது. எனவே மழைநீர்- கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக கவுன்சிலர் சாந்தி கூறியதாவது: பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் மழைநீர், கழிவுநீர் கால்வாய்களுடன் சாலை விரிவாக்க பணிகள் துவங்கிய போது மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் திட்டமிட்டு பணிகளை செய்யாமல் கடந்த 3 மாதங்களாக சாலையோரத்தில் ஆங்காங்கே பெரிய பள்ளங்களை தோண்டி விரைந்து முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பள்ளங்களில் அடிக்கடி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். அதேபோல் இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் தவித்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

The post சின்னாளபட்டியில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnalapbar ,Coalkotta, Ap. ,Chinnanapatti Fungola ,Cinnambar ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் உள்பட 4 இடங்களில் ரூ.2.50 கோடியில்...