×

400 இடங்களில் இன்று ரம்ஜான் தொழுகை

 

ஈரோடு, ஏப். 22: ஈரோடு மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று 200 பள்ளிவாசல்கள் உள்பட 400 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களால் இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற உள்ளது. ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பள்ளிவாசல். ரயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல் மற்றும் கோபி, சத்தி, பவானி, பவானிசாகர்,பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம் உள்ளிட்ட 40 ஈக்தா மைதானம் உள்பட மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. இது தவிர பொது இடங்களில் 200 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 400 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 400 இடங்களில் இன்று ரம்ஜான் தொழுகை appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Erode ,Erode district ,Ramzan festival ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...