×

அன்னூரில் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நலத்திட்ட உதவி

 

அன்னூர்,ஏப்.22: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நோன்பு இருந்த இஸ்லாமிய மக்கள் இன்றோடு தங்களது நோன்பினை முடித்துக் கொள்வர். இந்த நிலையில் அன்னூரில் உள்ள திமுக நகர அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதனை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம், நகர அவைத்தலைவர் எட்ராஜ், நகர துணை செயலாளர் ராஜேஸ்வரி விஸ்வநாதன், நகரப் பொருளாளர் ஹரிசங்கர், ஒன்றிய பிரதிநிதி பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி நாசர், நகரத் துணைச் செயலாளர் இதயத்துல்லா, வார்டு செயலாளர்கள் பிரேம் தேவா, மணி, கவுன்சிலர்கள் காஞ்சனா சிவக்குமார், ரங்கராஜ், குணசுந்தரி, திமுக வார்டு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அன்னூரில் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Ramzan ,Muslims ,DMK ,Dinakaran ,
× RELATED கிறிஸ்தவர், இஸ்லாமியர்களுக்கு...