×

₹3.76 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

 

மல்ல சமுத்திரம், ஏப்.22: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 108 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ₹74.55 முதல் ₹82.05 வரையிலும், இரண்டாம் தரம் ₹54.45 முதல் ₹68.80 வரையும் விற்பனை ஆனது. காங்கேயம், ஈரோடு, சேலம் ஆகிய பகுதியிலிருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வந்திருந்தனர். மொத்தம் 108 மூட்டை கொப்பரை, ₹3.76 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

The post ₹3.76 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kopari ,Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்