×

தீ தடுப்பு தொண்டு நாள் வார விழா

 

திருத்துறைப்பூண்டி, ஏப். 22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பஞ்சநதம் தலைமையில் தீ தடுப்பு தொண்டு நாள் வார விழாவில் தீ தடுப்பதற்குரிய வழிமுறைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தீ பிடிக்கும் பொருட்களை எப்படி அணைப்பது, சமையல் செய்யும் போது செயற்கை இழை துணிகளை பயன்படுத்தக்கூடாது. சிலிண்டரை செங்குத்தாக வைக்க வேண்டும். அடுப்பு உயரமான இடத்தில் வைக்க வேண்டும். கடைகளில் வருடம் ஒருமுறை தீயணைப்பு சாதனங்கள் எக்ஸ்பயரி தேதி அறிந்து புதிய தீயணைப் சிலிண்டர் மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

The post தீ தடுப்பு தொண்டு நாள் வார விழா appeared first on Dinakaran.

Tags : Fire Prevention Charity Day Week Festival ,Thirutharapoondi ,Thiruthurapoondi ,Panchanatham ,Tiruvarur district ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...