×

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் விறுவிறுப்பு

 

திருத்துறைப்பூண்டி, ஏப். 22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையானது. பிறவி நோய் தீர்ப்பதற்கும் அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். மேலும் இங்கு உள்ள கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை நாட்களில் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைவதுடன், வாழ்க்கையில் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லிலால் ஆன கஜசம்ஹாரமூர்த்தி சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றது. தற்போது குடமுழுக்கு செய்ய வேண்டியுள்ளதால், திருப்பணிகள் துவங்குவதற்கு ஏதுவாக கோயிலுள்ள 24 விமானங்களுக்கும் படம் வரைந்து விமான பாலாலையம் கடந்த ஆண்டு செப் 5ம் தேதி செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

The post திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthurapoondi Piravi ,Darshaneeswarar temple ,Thirutharapoondi ,Tiruvarur district ,Tiruthurapoondi Parvi Darshaneeswarar temple ,Tiruthurapoondi Parvi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...