×

மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

 

கும்பகோணம்:கும்பகோணம் அருகே பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் நீதிபதி பங்கேற்றார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மூலம் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி அப்துல் கனி கலந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினார். மேலும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், சட்ட உதவி மைய உதவியாளர் ராஜேஷ்குமார், சட்ட தன்னார்வலர் தனசேகரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kapasura ,Papanasam court ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை!!