×

சித்தாமூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த இளம்பெண்

செய்யூர்: சித்தாமூர் அருகே இளம்பெண் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். செய்யூர் அருகே கீழ்க்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் எட்டியம்மாள் (17). இவரும் அவரது உறவினரான திருப்பதி என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எட்டியம்மாளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும், எட்டியம்மாள் தனது காதலை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், எட்டியம்மாளை அவரது பெற்றோர் நேற்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் எட்டியம்மாள் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். தகவலறிந்த செய்யூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரிக்கின்றனர்.

The post சித்தாமூர் அருகே மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Sitamur ,Dodur ,Perumal ,Lower Kharanah ,Deur ,
× RELATED அருள் மழை பொழியும் அரங்கநாதப் பெருமாள்