×

சென்னையில் 2,000 சிசிடிவி கேமரா, காவலர்களுக்கு எரிபொருள் படி உயர்வு என தமிழ்நாடு காவல்துறைக்கு 101 அறிவிப்புகள்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு காவல்துறைக்கு 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:
* சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள பாதுகாப்பு பிரிவுக்கு வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் புதிய கருவிகள் ரூ.2 கோடியே 74 லட்சத்து 13 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை மாநகரில் 2 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் நிறுவப்படும்.
* ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் சென்னை மாநகர காவல் துறைக்காக நவீன உபகரணங்கள் ரூ.2 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்தில் வாங்கப்படும்.
* வழித்தடங்களில் 300 தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்கள் நிறுவவும், மோட்டார் வாகன விதிமீறல்களுக்காக வழக்குகளை பதிவு செய்ய 30 புதிய போக்குவரத்து சமிக்ஞைகளில் தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்கள் ரூ.19 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள ஐபிஎஸ் அல்லாத காவல் துணை கண்காணிப்பாளர் (தரம்-1) முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 976 அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி செலவில் மடிக்கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
* நுண்ணறிவு பிரிவில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு 247 மடிக்கணினிகள் ரூ.1 கோடியே 1 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை ரூ.9 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரம் செலவில் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டுக்கு ரூ.3 கோடியே 10 லட்சம் வழங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், இதர அலுவலக கட்டிடங்களிலும் 270 தீயணைப்பு கருவிகள் ரூ.49 லட்சத்து 95 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டு நிறுவப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் மத்திய குற்றப் பிரிவில் புலனாய்வு அதிகாரிகளுக்காக 40 மடிக்கணினிகள் ரூ.24 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை பெருநகர காவலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சிக்னல்கள் ரூ.4 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மாற்றப்படும்.
* குற்றவாளிகளை கைது செய்ய 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் ரூ.75 லட்சத்து 7 ஆயிரம் செலவில் வாங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் துணை ஆணையாளர் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு மின்சார ஜெனரேட்டர் ரூ.68 லட்சத்து 28 ஆயிரத்தில் பொருத்தப்படும்.
* கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி ரூ.1 கோடியில் வாங்கப்படும்.
* சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 3 துறை சார்ந்த வல்லுநர்கள் ஒரு வருட காலத்துக்கு ஈடுபடுத்துவதற்கென ரூ.36 லட்சம் வழங்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள நுண்ணறிவுப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவு ஒன்று ரூ.2 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரம் செலவில் உருவாக்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் துறையில் செயற்கை நுண்ணறிவு உரையாடல் திட்டத்தை சாட்போட், வாய்ஸ்போட், வீடியோ சாட் உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படுத்தப்படும்.
* தாம்பரம் ஆணையரகத்துக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் காவல் நிலையம் தேவையான பணியாளர்களுடன் ரூ.6 கோடியே 55 லட்சத்து 91 ஆயிரம் செலவில் அமைக்கப்படும்.
* சென்னை பெருநகர காவல் பகுதியில் வானகரம், தாம்பரம் ஆணையரகம் பகுதியில் மேடவாக்கம், ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் புதூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடியே 35 லட்சம் என மொத்தம் ரூ.25 கோடியே 44 லட்சம் செலவில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் நிர்வாக வசதிக்காக ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
* தாம்பரம் மாநகரம் பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 63 ஆயிரம் செலவில் கட்டப்படும்.
* தாம்பரம் மாநகரம் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.2 கோடியே 15 லட்சத்தில் கட்டப்படும்.
* சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு 5 நான்கு சக்கர இழுவை வாகனங்கள் மற்றும் 5 இருசக்கர இழுவை வாகனங்கள் ரூ.2 கோடி செலவில் வாங்கப்படும்.
* ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்கப்படும்.
* சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் 10 கோடியே 47 லட்சம் ரூபாயில் மகளிர் காவலர் விடுதி ஏற்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம் ஒடகரம், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஆகிய 4 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தலா ரூ.1 கோடியே 81 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.7 கோடியே 25 லட்சத்து 28 ஆயிரம் செலவில் நிறுவப்படும்.
வாகனங்கள் கொள்முதல்
* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 35 நீர்தாங்கி வண்டிகள் ரூ.26.25 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
* சென்னை புறநகர் மாவட்டம் பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ரூ.79.30 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
* மத்திய சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ரூ.79.30 லட்சம் மேம்படுத்தப்படும்.
* திருவல்லிக்கேணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிய கட்டிடம் ரூ.5 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் செலவில் கட்டப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மெரினா மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்களுக்கு இடர்ப்படி ரூ.6 ஆயிரமாக வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் பேசினார்.

The post சென்னையில் 2,000 சிசிடிவி கேமரா, காவலர்களுக்கு எரிபொருள் படி உயர்வு என தமிழ்நாடு காவல்துறைக்கு 101 அறிவிப்புகள்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Assembly ,and rescue services ,Tamil Nadu Police ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்