×

பழவேற்காட்டில் மகிமை மாதா தேர் திருவிழா: போலீசார் கொடி அணிவகுப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீனவ பகுதியில், மீனவ கிராமங்களுக்கு இடையே மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக, அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள், மோதல் போக்கில் ஈடுபடுவர்கள் கைது என பழவேற்காடு மீனவப்பகுதி, கடந்த, ஆறுமாதங்களாக பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருந்து வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். மீனவ கிராமங்களிடையே அரசு அதிகாரிகளின் சமாதான பேச்சுக்களும் தொடர்ந்தபடியே உள்ளது.

இந்நிலையில், பழவேற்காடு, நடுவூர்மாதகுப்பத்தில் உள்ள பிரசித்த பெற்ற மகிமைமாதா தேர்த்திருவிழா இன்று இரவு நடைபெறுகிறது. திருவிழாவின்போது மீனவ கிராமங்களுக்கிடையே, எந்தவொரு பிரச்னையும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், நேற்று மாலை திருவள்ளூர் மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி. அனுமந்தன் தலைமையில், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் 100போலீசார் மகிமை மாத ஆலயத்தில் துவங்கி, கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம், பழவேற்காடு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

The post பழவேற்காட்டில் மகிமை மாதா தேர் திருவிழா: போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Mahimai Mata Ther Festival ,Palavekkad ,Ponneri ,Ponnarey Palavekadu ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...