×

ஹரிகோட்டாவில் இன்று ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காட்டில் மீன் பிடிக்க தடை: மீன்வளத்துறை உத்தரவு

பொன்னேரி: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இன்று பிற்பகல், 2.19 மணிக்கு பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான 25மணி 30நிமிட கவுன்டவுன் நேற்று பிற்பகல் 12.14 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, இன்று பழவேற்காடு பகுதி மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொன்னேரி மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

The post ஹரிகோட்டாவில் இன்று ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காட்டில் மீன் பிடிக்க தடை: மீன்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Harikota ,Fisheries Department ,Ponneri ,Sriharikota, Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED மீன் வளத்துறை சார்பில் 11 படகுகள் மீது நடவடிக்கை