×

நுபுர் சர்மா மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நுபுர் சர்மா மீதான வழக்கு தொடர்பாக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாஜ முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டார். அதையடுத்து அவர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி நுபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, ‘மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை அடுத்த நான்கு வாரங்களுக்கு அவர் மீதான கடுமையான சட்ட நடவடிக்கை கூடாது’ என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது. மற்றொரு வழக்கு: போலி வீடியோ பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘மணீஷ் காஷ்யப் தொடர்பான வழக்கையும் பீகாருக்கு மாற்றி உத்தரவிடலாமா? என்று கேட்டார். அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், பீகார் மாநில அரசு வக்கீல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். மனுதாரர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தார்.

The post நுபுர் சர்மா மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Nubur Sharma ,Madras High Court ,New Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!