×

அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் தேர்வு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாதாந்திர ஆட்சிமன்ற குழு (சிண்டிகேட்) கூட்டம், கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், துணைவேந்தர் வேல்ராஜ் உள்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிண்டிகேட் உறுப்பினர் மாற்றத்துக்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘2021ம் ஆண்டு சிண்டிகேட் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே விளையாட்டுத் துறையின் அமைச்சராக அவர் பொறுப்பு ஏற்றுள்ளதால், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ஏனெனில், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிண்டிகேட் குழுவில் இடம்பெற முடியும். இந்நிலையில் புதிய சிண்டிகேட் உறுப்பினராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு, எழும்பூர் எம்எல்ஏ ஐ.பரந்தாமனை புதிய சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்து, பதவி ஏற்றதில் இருந்து 3 ஆண்டுகாலம் பதவியில் இருப்பார் என அறிவித்தார்.

The post அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Egmore ,MLA Parantham ,Anna University ,Chennai ,Chennai Anna University ,Guindy ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...