×

போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ: அரையிறுதியில் சபலென்கா

ஸ்டுட்கார்ட்: ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா தகுதி பெற்றார். காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் (25 வயது, 31வது ரேங்க்) நேற்று மோதிய சபலென்கா (24 வயது, 2வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

அடுத்த 2 செட்டிலும் கடும் நெருக்கடி கொடுத்த சபலென்கா, படோசாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி இரண்டரை மணி நேரத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (நம்பர் 1, போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), அனஸ்டேசியா போத்தபோவா (ரஷ்யா), ஹடாட் மயா (பிரேசில்) ஆகியோர் காலிறுதியில் களமிறங்கத் தகுதி பெற்றுள்ளனர்.

The post போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ: அரையிறுதியில் சபலென்கா appeared first on Dinakaran.

Tags : Porsche Tennis Grand Prix ,Sabalenka ,Stuttgart ,Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…