×

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்இ

மெர்சிடிஸ் நிறுவனம், ‘ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்இ பர்பாமென்ஸ்’ காரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் ஏஎம்ஜி கார்கள் வரிசையில் அதிக திறன் வாய்ந்தது என கூறப்படுகிறது. இதில் 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த மாடலின் பெயரில் உள்ள இ என்பது, இதில் பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரை குறிக்கிறது.

து கூடுதலாக 204 பிஎச்பி பவர் வெளிப்படுத்தக்கூடியது. இரண்டும் சேர்ந்து இயங்கும்போது அதிகபட்சமாக 1,400 என்எம் டார்க்கில் 831 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக் கூடியது. இதனால் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 2.9 நொடிகளிலும், அதிகபட்சமாக மணிக்கு 316 கி.மீ வேகம் வரையிலும் செல்லும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 2 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இதுவும் சேர்ந்து இயங்கும்போது ஆல் வீல் டிரைவ் காராக இது செயல்படுகிறது.

முழுமையான எலக்ட்ரிக் மோடில் அதிகபட்சம் 12 கி.மீ தூரம் வரையிலும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகம் வரையிலும் செல்லும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.3.3 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் போர்ஷே பனாமெரா 4இ ஹைபிரிட் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்இ appeared first on Dinakaran.

Tags : Mercedes ,AMG ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்