×

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து சேதம்

அமெரிக்கா: அமெரிக்காவின் ஓக்லாஹோமாவில் வீசிய சூறாவளியால் அந்த நகரே உருகுலைந்துள்ளது. தேசிய வானிலை சேவை புதன்கிழமை மாலை ஓக்லஹோமா, கன்சாஸ் மற்றும் அயோவாவில் சூறாவளி மற்றும் கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கைகளை வெளியிட்டது. சூறாவளி குறித்து மெக்லைன் கவுண்டியின் துணை ஷெரிப் ஸ்காட் கிப்பன்ஸ் என்பிசி-யிடம் வழங்கிய தகவலில், ″நாம் பார்த்த சேதத்தின் அடிப்படையில் இன்னும் அதிகமாக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஷவ்னி மற்றும் கோலின் நகரங்கள் வழியாக சூறாவளி பயணித்தது. நகரங்களில் இடியுடன் கனமழை பெய்ய பலத்த சூறாவளி காற்று வீசியது இதனால் ஏராளமான வீடுகள் கட்டடங்கள் சேதமடைந்தன. 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சாலையில் மின் கம்பங்கள் மரங்கள் முற்றிலும் சரிந்து விழுந்ததால் நகரமே குப்பைகாடாக காட்சியளிக்கிறது. சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் வாகனங்களும் மோசமாக சேதமடைந்திருக்கின்றன. சூறாவளியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Oklahoma, USA ,USA ,National Weather Service ,Oklahoma, Kansas ,Dinakaran ,
× RELATED அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில்...