×

ரம்ஜான் பண்டிகையால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 1,300 ரூபாய்க்கு விற்பனை

அண்ணா நகர்: ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 1,300 ரூபாய்க்கும், சிறிய கட்டு வாழை இலை 800ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கடப்பா, தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, மதுரை வத்தலக்குண்டு, வேலூர், தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் வாழை இலை கட்டுகள் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை என்பதால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலைகள் வந்து குவிந்தன. ஒரு கட்டு வாழை இலை 1,300க்கும், சிறிய கட்டு வாழை இலை 800 ரூபாய்க்கும், ஒருதலை வாழை இலை 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வாழை இலை வியாபாரி சந்திரசேகர் கூறும்போது, “ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. வரும் 23ம்தேதி முகூர்த்த நாள் என்பதால் மேலும் வாழை இலை விலை உயர வாய்ப்புள்ளது. முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்த பின்பு வாழை இலையின் விலை படிப்படியாக குறையும்” என்றார்.

The post ரம்ஜான் பண்டிகையால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 1,300 ரூபாய்க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Ramzan ,Anna ,Nagar ,Ramzan festival ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...