×

ஆயுதபூஜையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு!: ஒரு கிலோ மல்லிகை ரூ.800க்கு விற்பனை..!!

குமரி: தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள மலர்சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அண்மையில் பெய்த மழையால் பூக்களின் வரத்து அதிகரித்த போதிலும் நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி சிறு வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு மலர்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அனைத்து பூக்களின் விலையும் பல மடக்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பட்ட மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 400 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் செவ்வந்தி 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும், ரோஜா 80 ரூபாயில் இருந்து 280 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தாமரை பூவின் விலை சுமார் 10 மடங்கு அதிகரித்து விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post ஆயுதபூஜையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு!: ஒரு கிலோ மல்லிகை ரூ.800க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Aramabuja Paddy Dowala Flower Market ,Aryudapuja ,Tamil Nadu ,Kannyakumari District ,Towale ,Arambhuja Dowala ,Flower ,Market ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...