×

விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டாவில் பிரசித்தி பெற்ற மார்க்கபந்தீஸ்வரர், ரங்கநாதர் கோயில்களின் புனரமைப்பு பணிக்கு ₹.4.40 கோடி ஒதுக்கீடு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

பள்ளிகொண்டா, ஏப்.21: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர், பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில்களில் திருப்பணிகள் செய்து புனரமைக்க ரூ.4.40 கோடி ஒதுக்கீடு செய்வதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்த குமார், ‘‘எனது தொகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்து புனரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

இதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளிக்கையில், ‘‘1000 ஆண்டுகளுக்கு மேலான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணிகளை மேற்கொள்ளுதல் திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலுக்கு ரூ.2.90 கோடியும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்ததும் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும். வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலின் உப கோயிலான சுந்தர விநாயகர் கோயில் மற்றும் கே.வி.குப்பம் தாலுக்கா பசுமாத்தூர் பசுபதீஸ்வரர், பசுபதிபொன்னியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

The post விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டாவில் பிரசித்தி பெற்ற மார்க்கபந்தீஸ்வரர், ரங்கநாதர் கோயில்களின் புனரமைப்பு பணிக்கு ₹.4.40 கோடி ஒதுக்கீடு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Markabandeeswarar ,Ranganatha ,Pallikonda, Virinchipuram ,Pallikonda ,Virinchipuram ,Shekhar Babu ,
× RELATED கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும்...