×

(தி.மலை) இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி பொருட்கள் இப்தார் நோன்பையொட்டி

 

ஆரணி, ஏப்.21: ஆரணியில் இப்தார் நோன்புயொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏழை இஸ்லாமியர்கள் நோம்பு நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு, பிரியாணி அரிசி மற்றும் மளிகளை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, 400 ஏழை இஸ்லாமியர்களுக்கு இப்தார் நோன்பு கொண்டாடுவதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இதைதொடர்ந்து. தனியார் அறக்கட்டளை சார்பில் சார்பில் ₹9 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட செயலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம், தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழன், அமர்ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் ரிஸ்வானாமாலிக், ஒன்றிய செயலாளர்கள் சுந்தார், மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி பொருட்கள் இப்தார் நோன்பையொட்டி appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Iftar fast ,Arani ,Muslims ,
× RELATED தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே...