×

மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை 2 நாள் சிறப்பு முகாம்

 

நெல்லை, ஏப். 21: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற வருகிற 26, 27ம் தேதிகளில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று யுடிஐடி என்னும் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது தாலுகாவிற்கு உட்பட்ட அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு மாற்றுத்திறாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் சென்று (நடக்க இயலாத மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பாதுகாவலர்கள்) ஏப்.26, 27 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 2 மணி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களில் நடக்கும் முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை 2 நாள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Nellai district ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி