×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை, தொடர்ந்து வார விடுமுறை என்பதால் நேற்று கேரளாவிலிருந்து வியாபாரிகள் யாரும் மார்க்கெட்டிற்கு வரவில்லை. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடி மதிப்புள்ள காய்கறி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ottenchatram ,Dindigul District ,Thangachiammapatti Gandhi ,Tamil Nadu ,Kerala ,Mumbai ,
× RELATED சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை