×

மக்களவை தேர்தலுக்கான பணி தொடக்கம்: 8 லட்சம் புதிய ஒப்புகை சீட்டு கருவிகள் உற்பத்தி

புதுடெல்லி: அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக 8.92 லட்சம் வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. மக்களவை தேர்தலுக்காக புதிதாக 8.92 லட்சம் வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகளை தயாரிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த எம்- 2 ரகத்தை சேர்ந்த 2.71 லட்சம் வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் மாற்றப்பட உள்ளது. இதில், முன்னேற்பாடு நடவடிக்கையாக 3.43 லட்சம் கருவிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தலில் கருவிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதை குறைப்பதற்கு 2.43லட்சம் கருவிகளில் மேம்பாட்டு பணிகள்( அப்கிரேட்) செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற வகையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்’’ என்று தெரிவித்தன.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 17.4 லட்சம் வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த தேர்தலின் போது முதல் முறையாக அனைத்து வாக்குசாவடியிலும் இந்த கருவிகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தலுக்கான பணி தொடக்கம்: 8 லட்சம் புதிய ஒப்புகை சீட்டு கருவிகள் உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Election Commission ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...