×

சொந்த மண்ணில் வீழ்ந்தது பஞ்சாப்பை பஞ்சராக்கி பெங்களூரு வெற்றி

மொகாலி: ஐபிஎல் 27வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை பஞ்சராக்கி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. மொகாலி பிசிஏ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐபிஎல் 27வது லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்களாக விராட் கோஹ்லி (பெங்களூரு), சாம்கரன் (பஞ்சாப்) வந்து டாஸ் போட்டனர். டாசில் வென்ற பஞ்சாப், பீல்டிங்கை தேர்வு செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களம் கண்ட விராட் கோஹ்லி-டூபிளசிஸ் (இம்பேக்ட் பிளேயர்) ஜோடி பஞ்சாப் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் குவித்தனர். விராட் கோஹ்லி 59 ரன்னில் ஹர்ப்ரீத் ப்ரார் பந்தில் ஜித்தீஸ்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி திரும்பினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டூபிளசிஸ் 17.3 வது ஓவரில் நாதன்எல்லீஸ் பந்தில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து 84 ரன்னில் வெளியேறினார். 4வது விக்கெட்டாக தினேஷ்கார்த்திக் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 20 ஓவரில் பெங்களூரு அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2, அர்ஸ்தீப்சிங், எல்லீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்னை இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், 2வது பந்தில் அதர்வா டையை எல்பிடபிள்யூ முறையில் 4 ரன்னில் அவுட்டாக்கினார். அடுத்து 2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய மேத்யூசார்ட் 8 ரன்னில் ஹசரங்கா பந்தில் போல்டானார். அதிரடி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 2 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் அவுட் ஆக பஞ்சாப் ஆட்டம் கண்டது. 4வது விக்கெட்டிற்கு ஓபனிங் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் 13 ரன்னில் ரன்அவுட் ஆனார். பவர்பிளேவான 6 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து பஞ்சாப் திணறியது.

அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட் விழ, ஜித்தீஸ்சர்மா அதிரடியாக ஆடினார். இறுதியில் 41 ரன்னில் அவுட்டானார். 18.2 ஓவரில் பஞ்சாப் 150 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 46 ரன்னும், பெங்களூரில் முகமது சிராஜ் 4, ஹசரங்கா 2, பர்னல், ஹர்சல்பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பெங்களூரு அணி 24 ரன் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டது. முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

The post சொந்த மண்ணில் வீழ்ந்தது பஞ்சாப்பை பஞ்சராக்கி பெங்களூரு வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Punjab ,Moghali ,27th league match ,IPL ,Moghali PCA Stadium ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்