×

வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து தலைவர்கள் சிலைகளிலும் கியூஆர் கோடு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேப்பனஹள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி (அதிமுக): மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள் கிடைக்க அரும்பாடு பட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சாவு.க்கு தமிழகம் முழுவதும் திரு உருவச்சிலைகள் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்கள், அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் என அவருக்கு சிலை அமைக்க வேண்டும்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் தாத்தாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. உறுப்பினரின் கோரிக்கை நிதி ஆதாரத்துக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.
கே.பி.முனுசாமி : தமிழ்த் தாத்தா சிலை அமைக்கும் இடத்தில் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டினை வருங்காலத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் பதிக்க வேண்டும். அவருடைய புத்தகங்களை நூலாக தொடுத்து அனைத்து நூலகங்களுக்கும் வழங்க வேண்டும்.
அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்: புத்தகங்கள் நூலகங்களுக்கு கொண்டு வருவது நிதி நிலைக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளிலும், நினைவு இல்லங்களிலும் க்யூஆர் கோடு பொருத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூஆர் கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கப்படும்.

The post வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து தலைவர்கள் சிலைகளிலும் கியூஆர் கோடு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Veppanahalli ,MLA ,KP Munuswamy ,ADMK ,Legislative Assembly ,Manimekalai ,Silapathikaram ,Sivaka Chintamani ,
× RELATED அரசு மருத்துவமனையில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமி பலாத்காரம்