×

இனவெறி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் திடீர் ஓய்வு

ஹராரே: இனவெறி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கேரி பேலன்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக உள்ளார். ஜிம்பாப்வேயில் பிறந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் கேரி பேலன்ஸ் (33). இவர் ஜிம்பாப்வேக்காக அண்டர் 19 உலக கோப்பை, முதல் தர போட்டிகளில் விளையாடினார். 2013 முதல் இங்கிலாந்து அணியுடன் இணைந்து விளையாடினார். இவர் இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்டில் விளையாடி 1,498 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 4 சதங்கள், 7 அரை சதங்கள் அடங்கும். இதற்கிடையே யார்க்‌ஷயர் கவுண்டி கிளப் அணியுடன் விளையாடி 2014, 2015ல் சாம்பியன்ஷிப் வென்றார். கடந்த 2022 டிசம்பரில் யார்க்‌ஷயர் கவுன்ட்டர் கிளப் அணி வீரர் அசிம் ரபீக்கிற்கு எதிராக இனவெறி மொழி பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனை ஒப்பு கொண்ட பேலன்ஸ் அணியிலிருந்து விலகினார். பிறகு ஜிம்பாப்வே கிரிக்கெட் அழைப்பு விடுத்ததையடுத்து அந்த அணியுடன் இணைந்து ஒரு டெஸ்ட், ஒரு டி20, 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இச்சூழலில் நேற்று திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கேரி பேலன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மிகவும் யோசித்த பிறகே அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்தேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகவும், என்னை அணிக்கு அழைத்ததற்காகவும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தொழில்முறை விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாட முடியாத நிலையில் உள்ள நான், தொடர்ந்து விளையாடினால் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கும் விளையாட்டிற்கும் கேடு விளைவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பேலன்ஸ், கடந்த 2015ல் டெஸ்டில் 17 இன்னிங்சில் 1017 ரன்களை தொட்டு சராசரியாக 67.93 எடுத்தார். இது டான் பிராட்மேனின் முதல் 1000 ரன்களின் சராசரி 60ஐ விட அதிகம் மட்டுமின்றி, 1,000 ரன்களை வேகமாக தொட்ட மூன்றாவது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இனவெறி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் திடீர் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : England ,Harare ,Gary Ballance ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்