×

ஜேபிசி விசாரணைக்கு வலியுறுத்தி வரும் நிலையில் சரத் பவாருடன் –அதானி சந்திப்பு

மும்பை: அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இது இந்திய அரசியலில் கடும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டில் இருந்து விலகி, கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் கவுதம் அதானி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை நேற்று நேரில் சந்தித்தார். மும்பையின் சில்வர் ஓக் பகுதியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் கவுதம் அதானி அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. எந்த விவகாரம் குறித்து பேசினார்கள், திடீர் சந்திப்புக்கான காரணம் உள்ளிட்ட எந்த தகவலும் உடனடியாக தெரியவில்லை.

The post ஜேபிசி விசாரணைக்கு வலியுறுத்தி வரும் நிலையில் சரத் பவாருடன் – அதானி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Adani ,Sarath Pawar ,JBC ,Mumbai ,US ,Hindenburg ,Adani Group ,Dinakaran ,
× RELATED ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி