×

ஒட்டன்சத்திரம் பகுதியில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிப்பு தீவிரம்

ஒட்டன்சத்திரம்: ஒவ்வொரு   ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், நட்சத்திரமும் சேர்ந்த நாளே   திருக்கார்த்திகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்கள்   கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் தீபங்களை ஏற்றி தீபத்திருநாளாக   மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.கார்த்திகை திருவிழா வருவதையொட்டி   ஒட்டன்சத்திரம் அருகே சாமியார் புதூர், சீரங்கவுண்டன்புதூர், நால்ரோடு,   ஆயக்குடி பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும்   பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 1000 விளக்குகள் ரூ.700க்கு மொத்த   வியாபாரிகளால் ெகாள்முதல் செய்யப்பட்டு இப்பகுதிகளில் இருந்து   ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, தாராபுரம் ஆகிய ஊர்களுக்கு   விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இதுகுறித்து தீபம் தயாரிக்கும் தொழிலாளி சாமியார் புதூர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘தினமும்   சுமார் 1000 அகல் விளக்குகள் தயாரிக்க முடியும். கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா  தொற்றின் காரணமாக கோயில்கள் திறக்கப்படாமலும், பண்டிகைகள் ஏதும்   கொண்டாடப்படாமல் இருந்ததால் இத்தொழிலில் ஈடுபடாமல் இருந்ததால் எங்களின்   வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து   வருவதால் சொற்ப லாபத்தில் இத்தொழிலை செய்து வருகிறோம். தமிழக அரசு எங்களது   வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாங்கள் தொடர்ந்து இத்தொழில் ஈடுபட உதவிட   வேண்டும்’ என்றார்….

The post ஒட்டன்சத்திரம் பகுதியில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ottanchatram ,Othanchatram ,Karthikai ,Nakshatra ,Tirukarthikai ,Dinakaran ,
× RELATED வாழை விவசாயிகளுக்கு பயிற்சி