×

மதுரவாயலில் பரபரப்பு; பணம், செல்போன் திருடு போனதால் 16 பைக்குகளை தீ வைத்து எரித்தேன்: கைதானவர் பகீர் தகவல்

அண்ணாநகர்: சென்னை மதுரவாயல் விஜிபி அமுதம் நகர் பகுதியில் வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கம்பி உள்பட கட்டுமான பொருட்களை அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசையில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த குடிசை தீப்பிடித்து எரிந்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்குகள் அனைத்தும் தீயில் எரிய ஆரம்பித்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் வந்து பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்களும் மதுரவாயல் போலீசாரும் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 16 பைக்குகள் எரிந்து நாசமானது.

இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘8 வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மொத்தமாக ஒரே இடத்தில் பைக்குகளை நிறுத்தியிருந்தோம். குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்றனர். எனவே, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, நாசவேலை காரணமா என்ற கோணத்திலும் கோயம்பேடு போலீசார் விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது ஒருவர், பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில், நடத்திய விசாரணையில், ‘’அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

“குடிபோதையில் தூங்கியபோது எனது செல்போன், வாட்ச் மற்றும் பணத்தை யாரோ திருடி சென்றனர். திருடியவர்கள் இதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு பைக்கைதான் பெட்ரோல் ஊற்றி எரித்தேன். ஆனால் தீ பரவியதில் 16 பைக்குகள் எரிந்துவிட்டது’ என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு ராமசந்திரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மதுரவாயலில் பரபரப்பு; பணம், செல்போன் திருடு போனதால் 16 பைக்குகளை தீ வைத்து எரித்தேன்: கைதானவர் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Maduravayal ,Bhagir ,Annanagar ,VGP ,Amutham Nagar ,Dinakaran ,
× RELATED உணவு டெலிவரி ஊழியர் போல் வந்து வீடு...