×

போர்ஸ் சிட்டிலைன்

போர்ஸ் மோட்டார்ஸ் ஏற்கெனவே உர்பானியா பிரீமியம் என்ற வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியச் சந்தையில் தற்போது போர்ஸ் சிட்டிலைன் என்ற எம்யுவியை அறிமுகம் செய்திருக்கிறது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.15.93 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எம்யுவியின் முன்புறம் புதிய தோற்றத்தில் கிரில் அமைக்கப்பட்டுள்ளது. 2+3+2+3 என மொத்தம் 10 இருக்கைகள் கொண்டது.

அனைத்தும் முன்புறம் நோக்கிய இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 4 பவர் விண்டோக்கள் உள்ளன. முன்வரிசை சீட்கள் மற்றும் பின் வரிசை சீட்களுக்கு பிரத்யேக ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் மெர்சிடிஸ் பென்சின் எப்எம் 2.6 லிட்டர் சிஆர் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 91 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post போர்ஸ் சிட்டிலைன் appeared first on Dinakaran.

Tags : Porsche ,Porsche Motors ,
× RELATED சில்லி பாய்ன்ட்…