×

ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; கொல்கத்தாவுடன் டெல்லி மோதல்; முதல் வெற்றிபெற முனைப்பு: பிற்பகலில் பஞ்சாப்-பெங்களூரு பலப்பரீட்சை

மொகாலி: 16-வது ஐ.பி.எல். தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை பஞ்சாப் அணி 5 போட்டிகளில் ஆடி 3-ல் வெற்றி, 2-ல் தோல்வி கண்டுள்ளது. முந்தைய போட்டியில் காயத்தால் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதேபோல் காயத்தில் இருந்து மீண்டுள்ள அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனின் பெயர் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படலாம். பெங்களூருவுக்கு எதிராக மோதிய கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. பெங்களூரு அணி 5 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி 3-ல் தோல்வி அடைந்துள்ளது. விராட் கோஹ்லி, டுபிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய 3 பேர் சிறப்பாக ஆடினால் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும். இன்னும் முழு உடல்தகுதியை எட்டாத வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை.

இதைத்தொடர்ந்து டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி இந்த சீசனில் ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லியின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பலம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. தொடக்க வீரர் பிரித்வி ஷா, இம்முறை 5 ஆட்டங்களில் 34 ரன் மட்டுமே சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிட்செல் மார்ஷும் எதிர்பார்த்த அளவில் ஆடவில்லை.

இருப்பினும் முதல் வெற்றிபெற டெல்லி இன்று கூடுதல் முனைப்பு காட்டும். இதற்காக பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக பிரித்வி ஷாவுக்கு பதிலாக சர்பராஸ் கான் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மிட்செல் மார்ஷ் இடத்தில் ரீலி ரோஸோவ் அல்லது ரோவ்மன் பாவல் களமிறக்கப்படலாம். இதுபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு பதிலாக ஜேசன் ராய் களமிறங்கக்கூடும்.

இதனால் ஜெகதீசன் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வார் என தெரிகிறது. பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் நம்பிக்கை அளிக்கிறார். நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோரும் டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் தரலாம். 5 போட்டிகளில் வெறும் 60 ரன்களை மட்டுமே சேர்த்துள்ள அதிரடி ஆந்த்ரே ரஸ்சல் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; கொல்கத்தாவுடன் டெல்லி மோதல்; முதல் வெற்றிபெற முனைப்பு: பிற்பகலில் பஞ்சாப்-பெங்களூரு பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : IPL ,Lille 2 ,Delhi ,Kolkatha ,Punjap ,Bangalore Palaperit ,Mogali ,16th I. GP ,Punjab ,Bangalore ,Kolkta ,Bengaluru Palaperit ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...